நிஷ்தா என்பது உலகில் இதே வகையைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய ஆசிரியர்கள் பயிற்சித் திட்டமாகும்.
நிஷ்தா - பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கான தேசிய முன்முயற்சி (NISHTHA – National Initiative for School Heads and Teachers Holistic Advancement).
இது தொடக்க மட்டத்தில் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய பயிற்சித் திட்டத்தின் அடிப்படை நோக்கம், மாணவர்களிடையே விமர்சன சிந்தனையை (தீர்வு காண்) ஊக்குவிப்பதற்காகவும் வளர்ப்பதற்காகவும் ஆசிரியர்களை ஊக்குவிப்பதாகும்.
இது இதே வகையைச் சேர்ந்த ஒரு முதன்மையான முன்முயற்சியாகும். இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றிற்குத் தேசிய அளவில் தரப்படுத்தப்பட்ட பயிற்சி தொகுதிகள் உருவாக்கப் படுகின்றன.