TNPSC Thervupettagam

நிஷ்தா – ஆசிரியர்கள் பயிற்சித் திட்டம்

August 22 , 2019 2093 days 1012 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்  நிஷ்தா (தேசியப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழுமையான முன்னேற்றத் திட்டம்) என்ற ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  • மேலும் இவர், நிஷ்தா முன்னெடுப்பின் வலை தளம், பயிற்சித் தொகுதிகள், முதன்மைக் கையேடு மற்றும் கைபேசிச் செயலி ஆகியவற்றையும் அதன் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.
  • கைபேசிச் செயலி மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பு ஆகியவை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையத்தினால் மேம்படுத்தப்பட்டுள்ளன.
  • ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சித் திட்டமானது நாடெங்கிலும் ஏறத்தாழ 42 இலட்ச ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் திறன்களைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்