நீடித்த மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பிற்கான பிரகடனம்
February 15 , 2021 1633 days 643 0
மீன்வளக் குழுவை (Committee on Fisheries-COFI) சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட 34வது அமர்வானது நீடித்த மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பிற்கான முதலாவது பிரகடனத்திற்கு ஆதரவளித்துள்ளது.
COFI-34 என்பது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (UNFAO) மீன் வளக் குழுவின் 34வது அமர்வாகும்.
இந்தப் பிரகடனமானது சட்ட விரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப் படாத மீன் பிடிப்பைத் தடுப்பதற்கான ஒரு வலுவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றது.
மேலும் இது கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கங்களிலிருந்து மீண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்துகின்றது.
COFI-34 ஆனது 1995 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறுப்புமிக்க மீன் பிடிப்பிற்கான நடத்தை விதிகளின் 25வது நினைவு ஆண்டைக் குறிக்கின்றது.
இந்த விதியானது உலகம் முழுவதும் நீடித்த மீன்வளம் மற்றும் மீன் பிடிப்பை நோக்கிய ஒரு முக்கிய வழிகாட்டுக் கூறாகச் செயல்படுகின்றது.