நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மீது புரிந்துணர்வு ஒப்பந்தம்
August 11 , 2018 2691 days 867 0
நிதி ஆயோக் அமைப்பும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பும் (Confederation of Indian Industry - CII) நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மீது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் இரண்டு அமைப்புகளும் 3 ஆண்டு கால கூட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் நடைபெற்ற அரசு மற்றும் வணிக பங்குதாரர் மாநாடு நடைபெற்ற சமயத்தில் கையெழுத்திடப்பட்டது.
இம்மாநாடு நிதி ஆயோக், இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உலகம் அடைவதற்கான இந்தியாவின் தீர்வுகள் என்ற அறிக்கையை இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு வெளியிட்டது.