நீட் (NEAT) திட்டம் 2019 - உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு
September 21 , 2019 2063 days 780 0
உயர் கல்வியில் சிறந்த கற்றல் விளைவுகளைப் பெற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக “நீட்” (NEAT) என்ற ஒரு புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கற்பவரின் தேவைகளுக்கு ஏற்ப கற்றலை மேலும் தனிப்பயனாக்கவும் திருத்தியமைக்கவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி கூட்டிணைவானது (National Educational Alliance for Technology - NEAT) நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீட் திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக AICTE விளங்கும்.
இந்தத் திட்டம் பொது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்காளர்களாக இணைக்கப்படும்.
இவை NEAT தளத்தின் மூலம் கற்பவர்களின் பதிவுகளை நிர்வகிப்பதற்கும் தீர்வுகளை வளர்ப்பதற்கும் பொறுப்பாளர்களாக விளங்கும்.