நீட் (NEAT) என்ற ஒரு முன்னெடுப்பிற்காக தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான NIIT (தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் - National institute of Information Technology) என்ற ஒரு பன்னாட்டு நிறுவனமானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நீட் குறித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (மனித மற்றும் வள மேம்பாட்டு) தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்துவதற்காக NIIT ஆனது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுடன் (All India Council for Technical Education - AICTE) இணைந்துச் செயல்பட இருக்கின்றது.
NIIT ஆனது 1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை மேற்கொள்வதற்கான ஒரு இலாப நோக்கமற்ற பல்கலைக் கழகமாகும்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கற்றல் செயல்முறையைத் தனிப் பயனாக்குவதற்காக தொழில்நுட்பத்திற்கான தேசியக் கல்வி கூட்டணியானது (National Educational Alliance for Technology - NEAT) தொடங்கப் பட்டுள்ளது.
நீட் திட்டமானது AICTE ஆல் செயல்படுத்தப் படுகின்றது.