லடாக்கின் சுரு பள்ளத்தாக்கில் நீண்ட அலகு கொண்ட புதர் கதிர்க்குருவி தென்பட்டது.
46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதன்முறையாக இந்தப் பறவை இருப்பதை உறுதிப் படுத்தப் பட்டதை இது குறிக்கிறது.
இது அதன் நீண்ட அலகு மற்றும் வால் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றது என்பதோடு, இது மிகவும் அரிதாகவே வெளித் தோன்றும் மற்றும் பொதுவாக 2,400–3,600 மீட்டர் இடையேயான பனிப்படர்ந்த புல்வெளி சரிவுகளில் வாழ்கிறது.
இந்தப் பறவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.