நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக தொழிலாளர் அமைப்பு ஆகியவை மேற்கொண்ட ஒரு சமீபத்திய ஆய்வானது தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் பக்கவாதம் பற்றிய 22 ஆய்வுகளும் இதய நோய்கள் குறித்த 37 ஆய்வுகளும் அடங்கும்.
மேலும் இது 194 நாடுகளில் மேற்கொண்ட 2,300க்கும் அதிகமான ஆய்வுகளின் தரவுகளையும் சேகரித்துள்ளது.
ஒரு வாரத்தில் 55 மணிநேரம் வேலை செய்வது 35% பக்கவாதம் ஏற்படவும் 17% இதய நோய் ஏற்படவும் காரணமாக அமையும் என இந்த அறிக்கை கூறுகிறது.