நீதிக் கடிகாரம் (பலகை) - மதராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை
November 2 , 2019 2143 days 914 0
மதராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நிர்வாகம்சார் நீதிபதியான டி.எஸ்.சிவஞானம் என்பவர் நீதிமன்ற வளாகத்தில் 'நீதிக் கடிகாரத்தை (பலகை)' திறந்து வைத்தார்.
நீதிக் கடிகாரம் என்பது பின்வரும் தகவல்களைக் காட்டும் ஒரு ஒளி-உமிழ் இருமுனைய (light-emitting diode - LED) காட்சிப் பலகையாகும்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப் படுதல், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களால் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தரவரிசை.
பணியாற்றிக் கொண்டிருக்கும் நீதிபதிகளின் பெயர்கள்.
நீதிபதிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் அவர்களது தரவரிசை.
இந்தக் கடிகாரத்தின் முக்கிய நோக்கம் நீதித் துறை சார்ந்த தகவல்களைப் பரப்புவதும் சாதாரண மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.
இந்தியா முழுவதும் உள்ள 3,350 நீதிமன்றங்களுக்குமான இந்த யோசனையானது 2017 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமரால் முன்மொழியப் பட்டது.
முதல் கட்டமாக, இந்த நீதிக் கடிகாரங்கள் 24 உயர் நீதிமன்றங்களில் நிறுவப்பட இருக்கின்றன. பின்னர் அது மற்ற அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீட்டிக்கப்பட இருக்கின்றது.