மத்திய உள்துறை அமைச்சகமானது காலிஸ்தான் ஆதரவு அமைப்பான நீதிக்காக சீக்கியர்களின் (SFJ - Sikhs For Justice)இணைய தளங்களை முடக்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது இந்த இணைய தளங்களை முடக்குவதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 என்பதின் பிரிவு 69Aன் கீழ் சில ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.
SFJ என்பது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 என்பதின் கீழ் உள்ள ஒரு சட்ட விரோத அமைப்பாகும்.
இந்த அமைப்பானது சீக்கியர்களுக்கான ஒரு தனி நாடாக “காலிஸ்தான்” என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக “பொது வாக்கெடுப்பு 2020” என்பற்காக வேண்டி ஆதரவாளர்களைப் பதிவு செய்துள்ளது.