பிரிவினைவாதத்தின் அடிப்படையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (Sikhs for Justice - SFJ) என்ற ஒரு பிரிவினைவாதக் குழுவை இந்திய அரசு தடை செய்துள்ளது.
2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட SFJ ஆனது சர்வதேச சீக்கியச் சமூகத்தினரிடையே பொது வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்திருக்கின்றது.
இது “பொது வாக்கெடுப்பு 2020” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பஞ்சாபைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி நடத்தப்படும் ஒரு பொது வாக்கெடுப்பாகும்.