நீதித்துறை வெளிப்படைத்தன்மை குறியீட்டு அறிக்கை 2026
August 5 , 2026 7 days 77 0
விதி சட்டக் கொள்கை மையமானது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக அவற்றின் வெளிப்படைத்தன்மையை மதிப்பிடும் நீதித்துறை வெளிப்படைத்தன்மை குறியீட்டு அறிக்கையை வெளியிட்டது.
இந்தக் குறியீடானது 2025 ஆம் ஆண்டில் JALDI (இந்தியாவில் நீதி, அணுகல் மற்றும் தாமதங்களை குறைத்தல்) முன்னெடுப்பால் உருவாக்கப்பட்டது.
நீதித்துறை செயல்முறைகள், நிறுவன ஆளுகை மற்றும் நிர்வாகம் மற்றும் நீதித்துறை / நிர்வாகப் பணியாளர்கள் ஆகிய மூன்று பிரிவுகளில் இது வெளிப்படைத்தன்மையை மதிப்பிடுகிறது.
நீதிபதிகள் வழக்கில் இருந்து விலகுவதற்கான அளவுகோல்களை வெளியிடாமை, உச்ச நீதிமன்ற நேரடி ஒளிபரப்பு வழிகாட்டுதல்கள் இன்மை மற்றும் வரையறுக்கப் பட்ட பட்ஜெட் மற்றும் செலவு குறித்த வெளிப்படுத்தல்கள் போன்ற இடைவெளிகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவொரு உயர் நீதிமன்றமும் அனைத்து நீதிபதிகளின் முழுமையான சொத்து விவரங்களை வெளியிடவில்லை; சில உயர் நீதிமன்றங்களில் உள்ள ஒரு சில நீதிபதிகள் மட்டுமே சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்கின்றனர்.
வெளிப்படையான, அணுகக்கூடிய மற்றும் பொறுப்புள்ள நீதித்துறை நிறுவனங்களை ஊக்குவிப்பதை இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.