நீதித்துறையில் முதல் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுக் கொள்கை
July 30 , 2025 2 days 43 0
கேரள உயர் நீதிமன்றம் ஆனது பொறுப்பான மற்றும் வரையறுக்கப்பட்டப் பயன்பாட்டை மையமாகக் கொண்ட இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு குறித்த நீதித்துறை கொள்கையை வெளியிட்டது.
இந்தக் கொள்கையானது மனித மேற்பார்வை மற்றும் முறையான பதிவு பராமரிப்பு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பட்டியலிடல் போன்ற நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
இது செயற்கை நுண்ணறிவு கொண்டு சட்ட ஆவணங்களை வரைவதைத் தடை செய்கிறது மற்றும் மொழிபெயர்ப்புகள் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கான சரி பார்ப்பைக் கட்டாயப்படுத்துகிறது.
கேரள உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை மட்டுமே நீதிமன்றம் தொடர்பான பணிகளில் பயன்படுத்த முடியும்.