TNPSC Thervupettagam
August 6 , 2026 16 hrs 0 min 48 0
  • ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான எம்.எஸ்.லிபரான் தனது 87ஆவது வயதில் சண்டிகரில் காலமானார்.
  • 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் ஆணையத்திற்கு நீதிபதி லிபரான் தலைமை தாங்கினார்.
  • லிபரான் ஆணையம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அறிக்கையை சமர்ப்பித்தது என்பதோடு இது இந்தியாவின் மிக நீண்ட காலம் செயல்பட்ட விசாரணை ஆணையங்களில் ஒன்றாகும்.
  • இவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
  • நீதிபதி லிபரான் தனது நீண்டகால நீதித்துறை சேவைக்காகவும், சட்டத்தின் ஆட்சி மற்றும் இந்திய நீதித்துறைக்கான தனது பங்களிப்பிற்காகவும் அறியப்பட்டவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்