நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம்
December 11 , 2025 15 days 112 0
இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை முன்மொழிய லோக்சபா சபாநாயகரிடம் கடிதம் சமர்ப்பித்தனர்.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124 உடன் சேர்த்து படிக்கப்பட்ட பிரிவு 217ன் கீழ் அவரை நீக்குவதற்கான தீர்மானத்தை அவர்கள்முன்மொழிய முயன்றனர்.
நீதிபதி சுவாமிநாதனின் நடத்தை, பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் மதச்சார்பற்ற செயல்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியதாக அவர்கள் கூறினர்.
மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் எழுதிய கடிதங்களின் நகல்களை இந்தியக் குடியரசு தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் எம்.பி.க்கள் சமர்ப்பித்தனர்.
மக்களவையின் நூறு உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும்.
தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், மூன்று பேர் கொண்ட குழு அதை விசாரிக்கும்.
அதன் பிறகு, இரு அவைகளும் சிறப்புப் பெரும்பான்மையுடன் (மூன்றில் இரண்டு பங்கு வருகை மற்றும் வாக்களிப்பு, மொத்த உறுப்பினர்களின் முழுமையான பெரும்பான்மை) அததீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இறுதியாக, குடியரசு தலைவர் பதவி நீக்க உத்தரவைப் பிறப்பிப்பார்.
இருப்பினும், இந்தியாவில் எந்த நீதிபதியும் இதுவரையில் வெற்றிகரமாக பதவி நீக்கம் செய்யப்படவில்லை.