TNPSC Thervupettagam

நீதிபதி மற்றும் மக்கள்தொகை இடையேயான விகிதம்

August 9 , 2021 1467 days 588 0
  • இந்தியாவில் நீதிபதி மற்றும் மக்கள்தொகை இடையேயான  விகிதமானது 2020 ஆம் ஆண்டில் 1 மில்லியன் மக்களுக்கு 21.03 நீதிபதிகள் என்று இருந்தது.
  • இந்த விகிதமானது 2018 ஆம் ஆண்டில் 1  மில்லியன் மக்களுக்கு 19.87 நீதிபதிகள் எனவும், 2019 ஆம் ஆண்டில் 20.39 நீதிபதிகள் எனவும் இருந்தது.
  • இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
  • 2014 ஆம் ஆண்டில் 31 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 34 ஆக உயர்ந்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் 906 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 1079 ஆக உயர்ந்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் 19,518 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 24,225 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்