TNPSC Thervupettagam

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

April 13 , 2026 5 days 103 0
  • புது தில்லியில் தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கான நாடாளுமன்ற பதவிநீக்க நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார்.
  • அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார்.
  • நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-இன் கீழ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்ட நீதிபதிகள் விசாரணைக் குழுவிலிருந்து இது ஒரு "நியாயமற்ற" விசாரணை என்று கூறி அவர் விலகினார்.
  • விசாரணை செயல்முறை மற்றும் பதவி நீக்க நடவடிக்கைகளை சவால் செய்து அவர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்பின் 124(4)வது சரத்துடன் இணைத்து வாசிக்கப்படும் 218வது சரத்தின் கீழ், நிரூபிக்கப் பட்ட தவறான நடத்தை அல்லது இயலாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு நீதிபதியை பதவியிலிருந்து நீக்க முடியும்.
  • நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968ன் படி, பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மக்களவையில் குறைந்தபட்சம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தீர்மானம் தேவை.
  • அதைத் தொடர்ந்து ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, இறுதியாக இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மையுடன் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
  • பதவி விலகும் பட்சத்தில், பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒரு நீதிபதிக்கு வழங்கப்படும் அதே ஓய்வூதியப் பலன்களைப் பெற ஒரு நீதிபதி தகுதியுடையவர் ஆவார்.
  • அவரது பதவி விலகலுடன், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான எதிர்கால நடவடிக்கை, இது வரை கண்டிராத ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது.
  • இருப்பினும், பதவி நீக்கத் தீர்மானத்தின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தாலும், அரசாங்கம் மற்ற சட்ட வழிமுறைகளைக் கருத்தில் கொள்ளலாம் ஆனால் அதற்கு நீதித் துறையின் ஒப்புதல் தேவைப்படலாம்.
  • ஒரு நீதிபதியின் குற்றத்தை (அவர் பதவியில் இருந்த காலத்திலிருந்து அவர் செய்த செயல்களுக்காக) எந்தவொரு நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமானால், வழக்குத் தொடர இந்தியத் தலைமை நீதிபதி அதற்கு அனுமதியை வழங்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்