நீதிபதிகளின் பதவி உயர்வு குறித்து உச்ச நீதிமன்றம் 2024
September 14 , 2024 319 days 292 0
நீதிபதிகளின் பதவி உயர்வுக்கான பரிந்துரையை உயர் நீதிமன்ற (HC) தலைமை நீதிபதி தனியாக மறுபரிசீலனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் (SC) தீர்ப்பு அளித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவானது கூட்டாகச் செயல்படுவதன் மூலம் மட்டுமே இந்தப் பரிசீலனையினை மேற்கொள்ள முடியும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் உள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவானது, நீதிபதிகள் நியமனங்கள் குறித்த பரிந்துரையை மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவிற்கு அனுப்புகிறது.
இறுதி முடிவுகள் இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளின், நீதிபதிகள் தேர்வுக் குழுவினால் மேற்கொள்ளப் படுகின்றன.
நாட்டில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது குறித்தும் மூன்று மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிபதிகள் தேர்வுக் குழு முடிவு செய்கிறது.