TNPSC Thervupettagam

நீதிமன்றங்களுக்கான வரைவு செயற்கை நுண்ணறிவு விதிகள்

June 9 , 2026 5 days 87 0
  • நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதற்கான வரைவு ஒழுங்குமுறைகளை உச்ச நீதிமன்ற செயற்கை நுண்ணறிவு குழு வெளியிட்டுள்ளது.
  • இந்த வரைவு விதிகள், நீதித்துறை முடிவுகள், தண்டனை விவரங்கள், பிணை முடிவுகள் அல்லது சாட்சிகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கின்றன.
  • வழக்கு மேலாண்மை, படியெடுத்தல் மற்றும் மொழியாக்கம் போன்ற பணிகளுக்கு AI அமைப்புகளை ஒரு துணைப் பங்கை வகிக்கும் வகையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • இந்த விதிகள் மனிதக் கண்காணிப்பைக் கட்டாயமாக்குகின்றன, மேலும் நீதிமன்ற செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையற்ற அல்லது விளக்கமளிக்க முடியாத செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்கின்றன.
  • இந்த வரைவு ஒழுங்குமுறைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை 2026 ஆம் ஆண்டு ஜூன் 20 வரை சமர்ப்பிக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்