இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) கடற்படுகை அடிப்படையிலான நீர்மூழ்கிக் கப்பல் கண்காணிப்பிற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீரடி ஒளி இழை உணர்திறன் அமைப்பை (UFOSS) நிறுவுவதற்கான திட்டத்தை DRDO தொடங்கி உள்ளது.
ஒலியியல் மற்றும் நீரியல் அளவீட்டு உணரிகளின் நிலையான நீரடி வலைப்பின்னலான UFOSS நீருக்கடியில் நடக்கும் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கிறது.
கடற்படுகையில் பொருத்தப்பட்ட ஒலி உணர் கருவிகள் மூலம் உந்துவிசை சத்தம், பொறி இயந்திர அதிர்வுகள் மற்றும் இயந்திர ஒலிகளைப் படம்பிடிப்பதன் மூலம் இது நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிகிறது.
இந்த அமைப்பு நீரடி ஒளியிழை வடங்கள் மூலம் ஒலிச் சமிக்ஞைகளை ஒளியியல் தரவுகளாக மாற்றுகிறது மற்றும் அவற்றை கடற்படை தரை நிலையங்களில் பகுப்பாய்வு செய்கிறது.
இது கடல்-தரக் கூறுகள் மற்றும் 20 ஆண்டு கால செயல்பாட்டு ஆயுட்காலத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளதுடன் இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.