நீரடி தகவல்தொடர்புச் சேவைக்கான உணர்வி தொழில்நுட்பம்
May 13 , 2023 833 days 381 0
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை நீரடி தகவல்தொடர்புச் சேவைக்கான ஒரு அதிநவீன உணர்வி தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளன.
புதிதாக உருவாக்கப் பட்டுள்ள இந்த PZT மெல்லிய இழை அடிப்படையிலான ஒலி சார் உணர்வியானது, வழக்கமான PVDF-அடிப்படையிலான ஒலி சார் உணர்வியை விட அதிக செயல்திறனைக் கொண்டுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பமானது, பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் சாதனங்களைத் தயாரிக்க உதவும்.
இது அழுத்தப்பட்ட நுண்மின்னியக்க அமைப்புத் தொழில்நுட்பம் என்று அழைக்கப் படுகிறது.