TNPSC Thervupettagam

நீரின் தரத்தை சோதித்தல் மற்றும் கண்காணித்தலுக்கான கட்டமைப்பு

March 17 , 2021 1593 days 641 0
  • நீரின் தரத்தைச் சோதனையிடவும் அதன் கண்காணிப்பினை மேற்கொள்வதற்குமான ஒரு கட்டமைப்பினை ஜலசக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • இது மத்திய அரசின் ஒரு தலைமைத்துவத்  திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
  • இதன்கீழ், வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், தேசிய சோதனை மற்றும் ஆய்வக மதிப்பீட்டு அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பை உருவாக்குவதை கட்டாயமாக்கியுள்ளன.
  • அடுத்த ஆண்டில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் வட்டத்திலும் இத்தகைய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
  • பஞ்சாயத்து நிர்வாக அளவில் கிராம தண்ணீர் மற்றும் துப்பரவுக் குழுவில் உள்ள பெண்களைக் கொண்ட குழுவிற்கு வேண்டி தள ஆய்வு கருவிகள் வழங்கப்படும்.
  • இந்தச் சோதனையின் அனைத்து முடிவுகளும் தண்ணீர் தரத்தின் தரவு மேம்பாட்டு முறை அமைப்பில் உள்ளீடு செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்