நீரின் தரத்தை சோதித்தல் மற்றும் கண்காணித்தலுக்கான கட்டமைப்பு
March 17 , 2021 1640 days 665 0
நீரின் தரத்தைச் சோதனையிடவும் அதன் கண்காணிப்பினை மேற்கொள்வதற்குமான ஒரு கட்டமைப்பினை ஜலசக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இது மத்திய அரசின் ஒரு தலைமைத்துவத் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
இதன்கீழ், வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், தேசிய சோதனை மற்றும் ஆய்வக மதிப்பீட்டு அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பை உருவாக்குவதை கட்டாயமாக்கியுள்ளன.
அடுத்த ஆண்டில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் வட்டத்திலும் இத்தகைய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
பஞ்சாயத்து நிர்வாக அளவில் கிராம தண்ணீர் மற்றும் துப்பரவுக் குழுவில் உள்ள பெண்களைக் கொண்ட குழுவிற்கு வேண்டி தள ஆய்வு கருவிகள் வழங்கப்படும்.
இந்தச் சோதனையின் அனைத்து முடிவுகளும் தண்ணீர் தரத்தின் தரவு மேம்பாட்டு முறை அமைப்பில் உள்ளீடு செய்யப்படும்.