நீரியல் வானிலைப் பேரிடர்கள் பற்றிய தரவுகள்
August 19 , 2021
1460 days
575
- நீரியல் வானிலைப் பேரிடர்களால் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 6,800 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
- நீரியல் வானிலைப் பேரிடர்களுள் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் புயல் ஆகியவை அடங்கும்.
- அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் மேற்கு வங்காளத்தில் (964 உயிரிழப்புகள்) அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
- இது நீரியல் வானிலைப் பேரிடர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 14% ஆகும்.
- மேற்கு வங்காளம் தவிர மத்தியப் பிரதேசத்தில் 833 உயிரிழப்புகளும் அதனைத் தொடர்ந்து கேரளாவில் 708 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
- அந்த இரு மாநிலங்களிலும் ஏற்பட்ட அதிக அளவிலான உயிரிழப்புகள் வெள்ளத்தினால் ஏற்பட்டவையாகும்.
- தமிழ்நாட்டில் 201 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
Post Views:
575