நீரில் கரையக்கூடிய உரத் தொழில்நுட்பம்
September 11 , 2025
11 days
64
- ஏழு ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் நீரில் கரையக் கூடிய உர தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
- இந்தத் தொழில்நுட்பம் ஆனது சுரங்க அமைச்சகத்தால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் இந்திய மூலப்பொருட்கள் மற்றும் தாவர வடிவமைப்புகளைப் பயன்படுத்துகிறது.
- இது தற்போது இந்தியாவின் இறக்குமதியில் முன்னிலை வகிக்கும் சீனச் சிறப்பு உரங்களை 95% சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தச் செயல்முறை மூலம் ஒற்றை, கழிவுகள் அற்ற, உமிழ்வு இல்லாத முறை மூலம் பல வகையான உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.
Post Views:
64