TNPSC Thervupettagam
May 12 , 2025 17 hrs 0 min 34 0
  • முதல் முறையாக, ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோயின் ஒரு புதிய துணை வகையை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது, இளமைப் பருவத்தின் ஒரு தொடக்க நிலையின் போது ஏற்படும் நீரிழிவு நோய் (MODY) எனப்படும் அரிய வகை நீரிழிவு நோயை மையமாகக் கொண்டுள்ளது.
  • இது பொதுவாக குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ தோன்றும்.
  • இன்சுலின் உற்பத்தி செய்யும் கணைய பீட்டா செல்களின் சரியான செயல்பாட்டிற்கு முக்கியமான ABCC8 எனும் ஒரு குறிப்பிட்ட மரபணுவானது MODY துணை வகையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
  • MODY என்பது கணைய இன்சுலின் உற்பத்தியைப் பெருமளவு பாதிக்கும் ஒற்றை மரபணு மாற்றங்களால் ஏற்படும் ஓர் அசாதாரண, பரம்பரை /மரபணு வழி நீரிழிவு நோய்ப் பாதிப்பு வடிவமாகும்.
  • இன்றுவரையில், 13 MODY துணை வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • மரபணுக் குறைபாடுகளால் ஏற்படும் இந்தக் கோளாறுகளைத் தடுப்பதற்கு தற்போது எந்த வழியும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்