நீருக்கடியில் அமைந்த இராணுவ வாகனங்கள் அருங்காட்சியகம்
July 27 , 2019 2337 days 968 0
ஜோர்டன் நாடு அகாபா கடற்கரைக்கு அருகில் செங்கடலின் கீழ்ப்பரப்பில், தனது முதலாவது நீருக்கடியிலான இராணுவ வாகனங்கள் அருங்காட்சியகத்தைத் திறந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட 19 இராணுவ வன்பொருள் வாகனங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் கடலுக்கடியில் 92 அடி ஆழம் வரை மூழ்கியுள்ளது.
இந்தத் தனித்துவ சுற்றுலா அனுபவமானது ஏற்கெனவே புகழ்பெற்று விளங்கும் அகாபா டைவிங் (மூழ்கும்) பொழுதுபோக்கு இடத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
செங்கடல்
செங்கடல் என்பது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகியவற்றிற்கு இடையே அமைந்த இந்தியப் பெருங்கடலின் கடல்நீர் நுழைவுப் பகுதியாகும்.
இது உலகளாவிய இயற்கை நிதியத்தினால் (WWF - World Wide Fund for Nature) சர்வதேச 200 சூழலியல் பிரதேசமாக (சுற்றுச்சுழலுக்கு உகந்த) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச 200 சூழலியல் பிரதேசங்கள் பட்டியலில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சூழல் பிரதேசங்கள் “அருகிவரும் பகுதிகளாக” தரப்படுத்தப்பட்டுள்ளன.