இந்திய தர நிர்ணயப் பணியகம் (Bureau of Indian Standards - BIS) மேற்கொண்ட மாதிரி சோதனைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 21 பெரிய நகரங்களில் மும்பை நகர குழாய் நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்றும் டெல்லி நகர குழாய் நீர் மிக மோசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 நகரங்களில், 15 நகர குழாய் நீரின் மாதிரிகள் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது அவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்பு அளவுருக்களைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன.
2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட BIS இன் குடிநீர் தரத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட படி 28 அளவுருக்கள் மீது இந்த நீர் மாதிரிகள் சோதிக்கப்பட்டன.
சென்னையில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகள் 10க்கும் மேற்பட்ட அளவுருக்களில் தர சோதனைகளில் தோல்வியடைந்து, நகரத்தை நாட்டின் சுத்தமான நீர் தரவரிசைப் பட்டியலின் கீழ்நிலையில் வைத்துள்ளன.