TNPSC Thervupettagam

நீர் மாசு கண்காணிப்புப் பட்டியலில் PFAS சேர்ப்பு

April 9 , 2026 3 days 74 0
  • ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதன் நீர் மாசுக் கண்காணிப்புப் பட்டியலில் PFAS (பெர்- மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள்)-ஐ சேர்த்துள்ளது.
  • இவை "அழியா ரசாயனங்கள்" என்று அழைக்கப்படுகின்றன ஏனெனில் இவை சுற்றுச் சூழலில் எளிதில் சிதைவடையாது.
  • இதில் PFOS (பெர்ஃப்ளூரோஆக்டேன் சல்போனிக் அமிலம்) மற்றும் PFOA (பெர்ஃப்ளூரோ ஆக்டானாயிக் அமிலம்) போன்ற தீங்கு விளைவிக்கும் கலவைகள் அடங்கும்.
  • PFAS பொதுவாக ஒட்டாத சமையல் பாத்திரங்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் தொழில்துறை பொருட்களில் காணப்படுகின்றன.
  • இந்த ரசாயனங்கள் நீர், மண் மற்றும் காற்றில் கலந்து, உயிரினங்களின் உடலில் ஒரு கட்டத்தில் சேமிக்கப்படுகின்றன.
  • PFAS பாதிப்பானது புற்றுநோய், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கருவுறுதல் குறைபாடு போன்ற உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்