2026 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புகள் மூலம் ரவி மற்றும் பியாஸ் நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் கிருஷ்ணா நதிநீர் தகராறு தீர்ப்பாயம் ஆகியவற்றின் பதவிக்காலத்தை மத்திய அரசு ஒரு வருடம் நீட்டித்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறுகளைத் தீர்ப்பதற்காக 1956 ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறுகள் சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படுகின்றன.
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்ட ரவி மற்றும் பியாஸ் நதிநீர் தீர்ப்பாயம் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் இடையேயான நதிநீர்ப் பகிர்வு தகராறுகளை விசாரிக்கிறது.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் விவாத தீர்ப்பாயம் (KWDT-II) ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா இடையேயான நதிநீர் பகிர்வு தகராறுகளைக் கையாள்கிறது.
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் பதிவு 17-இன் கீழ் நீரானது மாநிலப் பட்டியலில் அடங்கும்.
சட்லஜ்-யமுனா இணைப்பு (SYL) கால்வாய் தகராறு என்பது பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே ரவி-பியாஸ் நதிநீரைப் பகிர்ந்துகொள்வதோடு தொடர்பு உடையதாகும்.