TNPSC Thervupettagam

நீர்சார் முதலீடுகள் குறித்த உலகளாவியக் கண்ணோட்ட சபை (GOCWI)

August 19 , 2025 2 days 37 0
  • தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் இராமபோசா GOCWI சபையினைத் தொடங்கி வைத்து, இந்தியப் பிரதமர் மற்றும் பிற உலகத் தலைவர்களை இந்தச் சபையின் உறுப்பினர்களாகச் சேர அழைப்பு விடுத்தார்.
  • G20 அமைப்பின் முன்னெடுப்பான GOCWI, உலகளாவிய பருவநிலை மற்றும் நிதி விவாதங்களில் நீர்சார் முதலீட்டிற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது G20, UN, MDB மற்றும் தனியார் துறைகளில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும், நிதியை வெளிக் கொணரும் மற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்.
  • ஆப்பிரிக்கா நீர்சார் முதலீட்டுத் திட்டம் (AWIP) ஆனது தற்போது உலகளாவிய நீர் முதலீட்டுத் தளமாக (GWIP) மேம்படுத்தப்படும்.
  • G20 அமைப்பிற்கான தென்னாப்பிரிக்கா தலைமையின் கீழ் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா நீர்சார் முதலீட்டு உச்சி மாநாட்டின் போது இது தொடங்கப் பட்டது.
  • சபையின் உறுப்பினர்களில் இந்தியா, பிரேசில், ஐக்கியப் பேரரசு, ஜெர்மனி, மெக்சிகோ, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, EU, அங்கோலா மற்றும் செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்