நீர்த் தரக் குறியீடு - இந்தியா 120வது இடம்: 70 சதவிகிதம் மாசுபாடு
December 16 , 2019 2059 days 507 0
நிதி ஆயோக் அமைப்பானது “கூட்டு நீர்த் தர மேலாண்மைக் குறியீடு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நீர்த் தரக் குறியீட்டில் உள்ள 122 நாடுகளில் இந்தியா 120வது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 70% நீர் இந்தியாவில் மாசுபட்டுள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
2020 ஆம் ஆண்டுக்குள் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுவதாக நிதி ஆயோக் அறிக்கையானது குறிப்பிட்டுள்ளது.
வருடாந்திர அளவில் நிலத்தடி நீர் நிரப்புதல் மற்றும் அதனை உறிஞ்சி எடுக்கும் முறை ஆகியவற்றின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தக் குறியீடு அமைந்துள்ளது.
இந்திய அரசானது ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிலத்தடி நீர் நிலைமை உள்பட நீர் கிடைப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட கால அளவிலானப் பிரச்சாரமாகும்.