சமீபத்தில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகமானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் நீர்த் துறைகளின் தரவரிசைகளை அந்தத் துறைகளின் செயல்திறன் இலக்குகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
இது அனைத்து மாநிலங்களிலும் நீர்வளத் தகவல் அமைப்பை (WRIS - Water Resource Information System) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, தரவரிசையில் குஜராத் முதலிடத்திலும் தில்லி கடைசி இடத்திலும் உள்ளன.
இந்தத் தரவரிசையில் ஏழு மத்திய அரசுத் துறைகளிடையே, இந்தியக் கள ஆய்வு நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தத் தரவரிசையில் தேசிய நீரியல் நிறுவனம் மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகியவை உள்ளன.
இந்தத் தரவரிசையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மிகக் குறைந்த தரவரிசையைப் பெற்றுள்ளது.
இந்தத் தரவரிசையில் அனைத்து மாநிலங்களுக்கிடையே தமிழகம் சிறப்பான செயல்பாடு கொண்ட மாநிலமாக தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலம் 2018 ஆம் ஆண்டில் இந்தத் தரவரிசையில் 33வது இடத்தில் இருந்தது. இது தற்பொழுது 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.