மாநில அளவிலான நீர்நிலை மஹோத்சவம் 2025 ஆனது நாகாலாந்தின் கோஹிமாவில் நீர்நிலை புனருத்தான் திட்டத்தின் தொடக்கத்தோடு தொடங்கப் பட்டது.
பாரம்பரிய நீர்நிலைகளைப் புத்துயிர் பெறச் செய்வது, தரமிழந்த நிலத்தை மீட்டு எடுப்பது மற்றும் தீவிரமான சமூகப் பங்கேற்பு மூலம் நீர்ச் சேமிப்பு முறைகளை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்தல், கிராமப்புற நிலைத்தன்மையை ஊக்குவித்தல், சுற்றுச் சூழல் சமநிலையை மீட்டெடுப்பது மற்றும் நீரூற்றுகள் மற்றும் நீர்நிலைக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பது ஆகியவை இதன் இலக்குகளாகும்.
பிரதமர் கிருஷி சிஞ்சாயி யோஜனா (PMKSY) திட்டத்தின் கீழ், நாகாலாந்தில் பதினான்கு நீர்நிலைத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்கள் நீர்நிலை மற்றும் நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல் படுத்துவதற்கு 90% மத்திய உதவியைப் பெறுகின்றன.