TNPSC Thervupettagam

நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் பசுமைப் பரவல் அதிகரிப்பு திட்டம் - செங்கல் பட்டு

July 5 , 2025 14 hrs 0 min 31 0
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது சுமார் 500 சிறு நீர்ப்பாசன குளங்கள் உள்ளன என்ற நிலையில் அவற்றுள் சுமார் 200 குளங்கள் 'நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் பசுமைப் பரவல் அதிகரிப்புத் திட்டம் - செங்கல்பட்டு' (Mission Blue-Green Chengalpattu) என்ற திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படுகின்றன.
  • மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை (DRDA) ஆனது, மேலும் 388 குளங்களை புனரமைப்பதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
  • இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (EFI) ஆனது நீடித்த நிலையான முறைகளைப் பயன்படுத்தி 100 குளங்களைப் புனரமைத்து ஒரு முக்கியப் பங்குதாரராக உள்ளது.
  • கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மறுசீரமைப்புக்குத் தாவரங்களின் வேர் மண்டல வடிகட்டுதல் சுத்திகரிப்பு முறையை அது பயன்படுத்தியது.
  • இங்கு வடகிழக்குப் பருவமழைக்கு மிக முன்னதாக நீர் கிடைக்கப் பெறும் தன்மையை மேம்படுத்தவதற்காக வேண்டி அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் பெரும்பாலான பணிகளை முடிக்க DRDA இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்