நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல் ஐஎன்எஸ் ஆந்த்ரோத்
March 27 , 2023 1005 days 536 0
ஆழமற்றக் கடற்பகுதியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல்களின் (ASW SWC) வரிசையில் எட்டுக் கப்பல்களுக்கான தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப் பட்ட இரண்டாவதுக் கப்பலான ஐஎன்எஸ் ஆந்த்ரோத் கப்பல் கொல்கத்தாவில் பயன்பாட்டிற்கு வந்தது.
இது கடலோரப் பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், குறைந்தளவு முக்கியத்துவம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் கடற்பகுதிகளில் கண்ணி வெடிகளை நிறுவும் செயல்பாடுகள் போன்றவற்றினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்தத் தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட முதல் கப்பலான ஐஎன்எஸ் அர்னாலா மூன்று மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது.