TNPSC Thervupettagam

நீர்வாழ் உயிரின வளர்ப்பு மீதான NGT-யின் அதிகார வரம்பு

June 5 , 2026 15 days 147 0
  • கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் (CAA) சட்டம், 2005-இன் கீழ் நிர்வகிக்கப் படும் கடலோர மீன்வளர்ப்பு அலகுகள் தொடர்பான சிக்கல்கள் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு (NGT) அதிகார வரம்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயச் (NGT) சட்டம், 2010-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சட்டங்களில் CAA சட்டம், 2005 இடம்பெறவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
  • தமிழ்நாடு கடற்கரையில் இயங்கும் இறால் பொறிப்பகங்கள் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு NGT பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.
  • கடலோர மீன்வளர்ப்பு அலகுகள் மத்திய அரசு வெளியிட்டுள்ள கடலோர ஒழுங்கு முறை மண்டல (CRZ) அறிவிப்புகளுக்கு இணங்க வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றம் ஆராயும்.
  • இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட (Suo motu) நீதிப்பேராணை மனுவாக பதிவு செய்யப்படும்.
  • வெட்டுவாங்கேணி மற்றும் மரக்காணத்தில் உள்ள இறால் பொறிப்பகங்கள் NGT-யின் வழிகாட்டுதல்களை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களில் இருந்து இந்த வழக்கு எழுந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்