TNPSC Thervupettagam

நீல வரியன் பட்டாம்பூச்சிகள் வலசை போதல்

October 24 , 2026 15 hrs 0 min 11 0
  • வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையொட்டி, மில்லியன் கணக்கான நீல வரியன் பட்டாம்பூச்சிகள் மற்றும் அடர் நீல வரியன் பட்டாம்பூச்சிகள் கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி வலசை போகின்றன.
  • வலசை போகும் இந்தப் பட்டாம்பூச்சிகளில் நீல வரியன் பட்டாம்பூச்சிகள் (திருமலா லிம்னியேஸ்), அடர் நீல வரியன் பட்டாம்பூச்சிகள், வெண்புள்ளிக் கருப்பன் பட்டாம் பூச்சிகள் மற்றும் இரு பட்டை அரளிவிரும்பி பட்டாம்பூச்சிகள் ஆகிய பட்டாம்பூச்சிகள் அடங்கும். இவை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிக அளவில் பதிவாகியுள்ளன.
  • வடகிழக்குப் பருவமழையின் கனமழையிலிருந்து தப்பிப்பதற்காகவும், தகுந்த ஓம்புயிரித் தாவரங்களைக் கொண்ட காடுகளை அடைவதற்காகவும் இவை மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி வலசை போகின்றன. அங்கு அவை உணவருந்துகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் முட்டையிடுகின்றன.
  • இவற்றின் அடுத்த தலைமுறைகள் அடுத்து வரும் மாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளிலேயே தங்கியிருக்கும், பின்னர் தென்மேற்குப் பருவமழைக்கு முன்னதாக, மே மாத வாக்கில் மீண்டும் கிழக்குத் தொடர்ச்சி மலையை நோக்கிப் பறந்து செல்லும்.
  • கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, அமைதிப் பள்ளத்தாக்கு மற்றும் பரம்பிக்குளம் போன்ற இடங்களில் இவை அதிகளவில் கூடுவதாகப் பதிவாகியுள்ளது. இவற்றின் வலசை போதலை ஆவணப்படுத்துவதில் குடிமக்கள் குழுக்கள் உதவுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்