TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடு எண்ணிக்கை கணக்கெடுப்பு 2026

June 7 , 2026 9 days 119 0
  • சமீபத்திய ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில், தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டின் எண்ணிக்கை 1,364 ஆக அதிகரித்துள்ளது கண்டறியப் பட்டு உள்ளது.
  • இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 1,303 லிருந்து 4.68% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 1,031 லிருந்து 32% ஆகவும் அதிகரித்துள்ளது.
  • நீலகிரி வரையாடு என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குரிய மலைவாழ் குளம்பின விலங்காகும்.
  • இது IUCN அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் செந்நிறப் பட்டியலில் ‘அருகி வரும் இனம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இக்கணக்கெடுப்பு 'நீலகிரி வரையாடு திட்டத்தின்' கீழ் தமிழ்நாடு வனத்துறை மற்றும் கேரள வனத்துறை ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது.
  • களத் தரவுகளை உடனுக்குடன் சேகரிப்பதற்காக, முதன்முறையாக ஆண்ட்ராய்டு அடிப்படையிலான "வருடை" என்ற கைபேசி செயலி பயன்படுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்