‘நீலக் கொடி’ சான்றளிப்புத் திட்டத்திற்காக நாடு முழுவதும் உள்ள 13 கடற்கரைகளை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
அடையாள சான்றளிப்பு செயல்முறையை முதலில் நிறைவேற்றிய கடற்கரை ஒடிசாவின் கோனார்க்கில் உள்ள சந்திரபாகா கடற்கரையாகும்.
இது நீலக் கொடி சான்றிதழைப் பெறும் ஆசியாவின் முதலாவது கடற்கரையாக உருவெடுக்க இருக்கின்றது.
கடற்கரைகள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றிற்கான நீலக் கொடித் திட்டமானது சர்வதேச, அரசு சாரா, இலாப நோக்கற்ற அமைப்பான FEE என்ற அமைப்பால் செயல்படுத்தப் படுகின்றது.
இது 1985 ஆம் ஆண்டில் பிரான்சில் தொடங்கியது. இது 1987 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நீலக் கொடிக் கடற்கரைகளைக் கொண்ட நாடுகள் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவையாகும்.
இதுபோன்ற 566 கடற்கரைகளுடன் ஸ்பெயின் நாடு முதலிடத்தில் உள்ளது.
சான்றிதழ் பெறுவதற்கான தகுதி நிலைகளில் கழிவுகளை அகற்றும் வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வசதிகள், முதலுதவி உபகரணங்கள் மற்றும் கடற்கரையின் முக்கிய பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்குத் தடை ஆகியவை அடங்கும்.