நீலக்குறிஞ்சி – அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்கள்
August 18 , 2024 351 days 324 0
நீலக்குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) மலரானது, IUCN அமைப்பின் (சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்) அச்சுறுதல் நிலையில் உள்ள உயிரினங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ செந்நிறப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஊதா நிற மலர்களைக் கொண்ட இந்தப் புதர்ச் செடியினம் ஆனது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.
உலகளாவிய செந்நிறப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்காக, தென்மேற்கு இந்தியாவின் மலை சார் புல்வெளிகளில் காணப்படும் இந்த முதன்மை இனம் மதிப்பீடு செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.
இவற்றினுடைய சுமார் 40% வாழ்விடங்கள் அழிந்து விட்டன என்ற நிலையில் மீதமுள்ள வாழிடங்கள் ஆனது யூகலிப்டஸ் (தைல மரம்) மற்றும் கரு வேலம் போன்ற அயல்நாட்டு இனங்களின் ஆக்கிரமிப்பின் காரணமாக நெருக்கடியான நிலையில் உள்ளன.