சியாச்சின் பனிப்பாறைகளில் ஏறுவதற்கு மாற்றுத் திறனாளிகள் குழு ஒன்றை வழி நடத்திச் செல்வதற்கு Team Claw என்ற அமைப்பிற்கு இந்திய அரசானது அனுமதி வழங்கி உள்ளது.
இது மாற்றுத்திறனாளிகள் அடங்கிய இப்பெரியக் குழுவிற்கு ஒரு புதிய உலக சாதனையாக அமையும்.
இந்தப் பயணமானது நீலச் சுதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப் படுகிறது.
நீலச் சுதந்திர நடவடிக்கையானது 2019 ஆம் அண்டில் CLAW Global எனும் ஒரு அமைப்பினால் தொடங்கப்பட்டதாகும்.
CLAW Global என்பது இந்திய இராணுவம் மற்றும் இந்தியக் கடற்படையின் முன்னாள் சிறப்புப் படைப்பிரிவு இயக்குநர்கள் அடங்கிய ஒரு குழுவாகும்.