TNPSC Thervupettagam

நுண்ணீர்ப்பு விசை மற்றும் மனித உடல் வெப்பச் சீராக்கம்

May 9 , 2025 12 days 56 0
  • "திரவ மாற்றங்கள் வெப்பச் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதால் நுண்ணீர்ப்பு விசையானது தொடர்ந்து உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது" என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
  • மனித உடல்கள் வயது, உடலின் கட்டுக்கோப்பு நிலை மற்றும் உடலில் உள்ள கொழுப்பு போன்ற பிற அளவுருக்களின் அடிப்படையில் வெப்பநிலை மாற்றங்களுக்கு வெவ்வேறு விதமாக செயலாற்றுகின்றன.
  • விண்வெளி போன்ற ஈர்ப்பு விசை அற்ற சூழல்களில், மனித உடல் மிக கணிசமான மாறுதல்களுக்கு உள்ளாகிறது என்பதால் அது எலும்புகள், தசைகள், இதயம், நோய் எதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம் என்பதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்டச் செல்களை கூட பாதிக்கிறது.
  • குறிப்பாக, உடல் ஆனது அதிக நேரம் நுண் ஈர்ப்பு விசைக்கு உட்படுவதால் கால்கள் மற்றும் கைகள் குளிர்கின்றன அதே சமயம் தலை, வயிறு மற்றும் அடிவயிற்றுப் பகுதி வெப்பமடைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
  • நுண் ஈர்ப்பு விசையின் தாக்கத்தின் கீழ் 2.5 மாதங்களில் உடலின் மைய வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியசிலிருந்து 37.8°C ஆக அதிகரிக்கலாம் (30% குறைவான வியர்வை மற்றும் 36% அதிக வளர்சிதை மாற்றத்துடன்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்