நுண்துகள் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான இந்தியாவின் முதல் உமிழ்வு வர்த்தகத் திட்டம்
June 10 , 2019 2224 days 870 0
நுண்துகள் காற்று மாசுபாட்டை குறைக்க இந்தியாவின் முதல் உமிழ்வு வர்த்தகத் திட்டத்தினை குஜராத்தின் முதல்வர் விஜய் ரூபானி 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தன்றுத் தொடங்கி வைத்தார்.
சந்தை அடிப்படையிலான திட்டமான இதில் உமிழ்வின் உச்ச வரம்பை அரசானது நிர்ணயிக்கின்றது. மேலும் தொழிலகங்கள் இந்த வரம்பிற்குள் தங்கள் உமிழ்வுகளைப் பராமரிப்பதற்காக உமிழ்வு அனுமதிகளை வாங்கவும் விற்கவும் இது அனுமதிக்கிறது.
இந்த உச்ச வரம்பு வர்த்தக முறையின் கீழ், அனைத்து தொழிற்சாலைகளாலும் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு காற்றில் உமிழக் கூடிய மொத்த மாசுபாட்டின் அளவையும் ஒழுங்கமைவு அமைப்பானது முதலில் நிர்ணயிக்கும்.
பின்னர், குறிப்பிட்ட மாசுபாட்டு அளவை அனுமதிக்கும் ஒரு அனுமதித் தொகுப்பு உருவாக்கப்படும். இதன் ஒட்டுமொத்த கூடுதலானது, அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்த உச்சவரம்பிற்குச் சமமாக இருக்கும்.
இந்த அனுமதிச் சீட்டுகளானது வாங்கக் கூடியவோ விற்கக் கூடியவோ அளவிலான உமிழ்வின் அளவு ஆகும்.
ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு அனுமதிப் பத்திரங்கள் ஒதுக்கப்படும். (இது சமமாகவோ, அதன் அளவைப் பொறுத்தோ அல்லது இதர விதிமுறைகளைப் பின்பற்றியோ அமையும்)
இதற்குப் பின்னர், எந்தவொரு இதர பிற பொருள்களைப் போன்றும் இந்த உமிழ்வு அனுமதிப் பத்திரங்களைத் தொழிற்சாலைகள் தமக்கிடையே ஒருவருக்கொருவர் வர்த்தகம் செய்து கொள்ளலாம்.