TNPSC Thervupettagam

நுண்நெகிழிகளின் லேபிள்கள் குறித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

October 1 , 2026 6 days 94 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) மறுசீராய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • நெகிழிப் பொட்டலங்களில் விற்கப்படும் குடிநீர், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றில் நுண் மற்றும் மீநுண் நெகிழிகள் (micro/nano plastics) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என நீதிமன்றத்தின் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
  • இந்தத் தயாரிப்புகள் பாதுகாப்பற்றவை என்று அந்த உத்தரவில் முடிவு செய்யப்படவில்லை என்றும், நுகர்வோருக்குத் தகவல்களை வழங்குவதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • நுண்நெகிழிகள் மற்றும் மீநுண் நெகிழிகளால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்த அறிவியல் பூர்வமான சான்றுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று FSSAI தெரிவித்துள்ளது.
  • FSSAI மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விடுத்த சவாலை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை மேற்கொள்ளும் எதிர்கால ஆய்வுகளுக்கு ஆதரவளிக்க FSSAI ஒப்புக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்