நுண்நெகிழிகளின் லேபிள்கள் குறித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு
October 1 , 2026 21 days 146 0
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) மறுசீராய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெகிழிப் பொட்டலங்களில் விற்கப்படும் குடிநீர், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றில் நுண் மற்றும் மீநுண் நெகிழிகள் (micro/nano plastics) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என நீதிமன்றத்தின் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தயாரிப்புகள் பாதுகாப்பற்றவை என்று அந்த உத்தரவில் முடிவு செய்யப்படவில்லை என்றும், நுகர்வோருக்குத் தகவல்களை வழங்குவதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நுண்நெகிழிகள் மற்றும் மீநுண் நெகிழிகளால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்த அறிவியல் பூர்வமான சான்றுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று FSSAI தெரிவித்துள்ளது.
FSSAI மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விடுத்த சவாலை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை மேற்கொள்ளும் எதிர்கால ஆய்வுகளுக்கு ஆதரவளிக்க FSSAI ஒப்புக் கொண்டுள்ளது.