நுரையீரல் அழற்சி 13 – வலு இணைவுத் தடுப்பு மருந்தினை நாடு முழுவதும் அளிக்கும் வகையிலான ஒரு விரிவுபடுத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கி உள்ளது.
இது ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்‘ என்ற நிகழ்வின் ஓர் அங்கமான அனைவருக்கும் நோய்த் தடுப்பினை வழங்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
PCV (Pneumococcal 13 - valent Conjugate Vaccine) என்ற தடுப்பு மருந்தானது அனைவருக்கும் வழங்கப் படுவது இதுவே முதல் முறை ஆகும்.
PVC 13 நுரையீரல் அழற்சிநோயை உண்டாக்கும் 13 வகை பாக்டீரியாக்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.
நிமோகாக்கஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் நுரையீரல் அழற்சி நோயானது குழந்தைகளில் தீவிரமான நுரையீரல் அழற்சி நோயினை ஏற்படுத்துவதற்கான மிகவும் பொதுவான காரணமாகும்.
இந்தியா மற்றும் உலக அளவில் நிகழும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு நுரையீரல் அழற்சி நோயே முதன்மைக் காரணமாக உள்ளது.
இந்தியாவில் 16% குழந்தைகளின் உயிரிழப்பிற்கு நுரையீரல் அழற்சி நோய் காரணமாக உள்ளது.