நுவாட் தாய் உடல் வருடுதல் - யுனெஸ்கோவின் புலப்படாத பாரம்பரியப் பட்டியல்
December 17 , 2019 2075 days 819 0
யுனெஸ்கோ அமைப்பானது தாய்லாந்தின் "நுவாட்" தாய் உடல் வருடலைத் தனது மனித குலத்தின் புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.
நுவாட் உடல் வருடலானது தசை வலிகளைத் தீர்க்க உதவும் சிக்கலான பகுதிகளைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
2008 ஆம் ஆண்டில் புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த போது இந்தப் பட்டியல் நிறுவப் பட்டது.