காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (KIVC - Khadi and Village Industries Commission) தனது புதுமைமிக்க நெகிழி கலக்கப்பட்ட கைவினை காகிதத்திற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது.
இந்த காகிதமானது REPLAN (REducing PLAstic from Nature - இயற்கையிலிருந்து நெகிழியை நீக்குதல்) என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவச் பாரத் அபியான் திட்டத்திற்கான KVIC அமைப்பின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இது இந்தியாவில் இவ்வகையிலான முதல் திட்டமாகும்.
கைவினைக் காகிதம் உருவாக்கப்படும் போது நெகிழிப் பொருட்கள் சிதைக்கப்பட்டு, தரம் குறைக்கப்பட்டு, நீர்மமாக்கப்பட்டு காகிதக் கூழுடன் சேர்த்துப் பயன்படுத்தப் படுகின்றன.