“நெகிழிக் கழிவுகளற்ற இந்தியாவிற்கான” கீதமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சரான ஹர்ச வர்த்தனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஸ்மிரிதி மன்ச் (PDUSM - Pandit Deendayal Upadhyaya Smriti Manch) என்ற லாப நோக்கில்லா நிறுவனத்தினால் இசையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இது 2022 ஆம் ஆண்டில் இந்தியாவை ஒரு நெகிழியற்ற தேசமாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இது இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 7 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.